பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை: நீதியமைச்சர் தெரிவிப்பு

🕔 October 9, 2018

பாடசாலை செல்லும் வயதுள்ள பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நீதியமைச்சர் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன் தரம் 01 தொடக்கம் 13ஆம் தரம் வரை பாடசாலைக் கல்வியை அத்தியாவசியமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

சிறுவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களை வீடுகளில் பெற்றோர்கள் வைத்திருப்பார்களாயின் அது தொடர்பில், ஆராய்ந்து வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கத்துக்கு உரிமை இருப்பதாகத் சுட்டிக்காட்டிய அமைச்சர் தலதா அத்துக் கோரள, இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments