ஜனாதிபதியின் விமர்சனத்தை அடுத்து, முந்திரிப் பருப்பு வழங்குநரை மாற்ற தீர்மானம்

🕔 September 13, 2018

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கான முந்திரிப் பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு, அந்த நிறுவனம் தீர்மானம் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

நேபாளில் இருந்து இந்தியா ஊடாக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கடந்த வாரம் இலங்கை வந்த போது, தனக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்பை – நாய் கூட உண்ண மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த விமர்சனத்தையடுத்து ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு இதுவரை காலமும் டுபாய் நிறுவனம் ஒன்றே முந்திரி பருப்பு வழங்கி வந்துள்ளது.

Comments