தலைப்புச் செய்திகள்

குற்றப் பத்திரம் வழங்காத போக்குவரத்துப் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பொருந்தக் கூடிய போக்குவரத்துக் குற்றமொன்றுக்காக குற்றப் பத்திரம் வழங்காத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராய், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

போதுமான அளவு குற்றப் பத்திரப் புத்தங்கள் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குற்றப் பத்திரப் புத்தகங்களுக்கு பொலிஸ் நிலையங்களில் தட்டுப்பாடு நிலைவுமாயின், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடிவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் களஞ்சியப் பிரிவில் குற்றப் பத்திரப் புத்தகங்கள் போதுமானளவு கையில் உள்ளன என அவர் கூறியுள்ளதோடு, மேலும் 01 லட்சம் குற்றப் பத்திரப் புத்தகங்கள் அச்சில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.