அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி: விரைவில் நியமனம்

🕔 August 1, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு, புதிய செயலாளர் ஒருவர் மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றும் ஜே. லியாகத் அலி என்பவரே, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அறிய முடிகிறது.

இதற்கான அனுமதியினை பொது நிருவாக அமைச்சுக்கு பொதுச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமயாற்றிய ஐ.எம். ஹனீபா (தற்போதைய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்) சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இடமாறிச் சென்றமையினை அடுத்து, அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ரி. அதிசயராஜ், அங்கு பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையிலேயே, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக லியாகத் அலி நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments