ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர்

🕔 July 26, 2018

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கடவுள் எனக் கூறிக் கொண்டு, கடந்து மூன்று ஆண்டுகளாக நபர் ஒருவர் வணங்கி வருகின்றார்.

இந்தியா – கோன்னே பிரதேசத்தைச் சேர்ந்த புஸ்ஸா என்னும் இளைஞர் ஒருவரே இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கடவுளாக வழிபடுவதோடு, தனது வீட்டிலுள்ள பூசை அறையிலும் ட்ரம்பின் படத்தை வைத்து வணங்கி வருகின்றார்.

ஒரு நாள் கூட ‘ட்ரம்ப் சாமி’யை வழிபடுவதற்கு தவறாத இவர், தனது அயலவர்கள் சிலரையும் இந்த வழிபாட்டில் இணைத்துக் கொண்டுள்ளார்.

புஸ்ஸாவின் இந்தச் செயற்பாடு அவரின் பெற்றோருக்குப் பிடிக்காததால், இதனை நிறுத்துமாறு கூறிவிட்டு, புஸ்ஸாவின் பெற்றோர் – அவரை விட்டும் விலகிச் சென்று விட்டனர்.

மேலும் ஒரு உளவியலாளரைச் சந்தித்து சிகிச்சை பெறுமாறும் புஸ்ஸாவிடம் பலரும் கூறுகின்றனர்.

இது குறித்து புஸ்ஸா பேசும்போது; “எனது பெற்றோரும் கிராமத்தவர்களும் என்னை பைத்தியம் என்று கூறுகின்றார்கள். உளவியலாளர்களை நானொன்றும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என, அவர்களிடம் நான் கூறி விட்டேன். ஏனென்றால், ட்ரம்ப் எனது கடவுள்.

மேலும், மற்றவர்கள் என்னைப்பற்றிப் பேசுவதை நான் அலட்டிக் கொள்ளவுமில்லை. ட்ரம்ப் எனது கடவுள், எனது இதயத்தில் அவர்தான் இருக்கிறார். நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். ஆகவே, நான் அவரை வணக்கி வருகிறேன்” என்கிறார்.

இதேவேளை, புஸ்ஸா செல்லுமிடமெல்லாம், டரம்பின் படத்தையும் கூடவே கொண்டு செல்கிறார். வேலை செய்யும் இடம், வயல்வெளி என்று, எல்லா இடங்களுக்கும் ட்ரம்பின் படத்துடனேயே சென்று வருகிறார்.

இன்னொருபுறம் ‘ட்ரம்ப் சாமிக்கு’ கோயில் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் புஸ்ஸா திட்டமிட்டுள்ளார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்