வீரகேசரியின் இழிவான தலைப்புச் செய்தி குறித்து, மன்னிப்புக் கோர வேண்டும்: ஆசாத்சாலி

🕔 June 16, 2018

– அஹமட் –

னவாதத்துக்கு இன்றைய வீரகேசரிப் பத்திரிகை எண்ணை ஊற்றியுள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி விசனம் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  செந்தில்நாதனுக்கு எழுதியுள்ள பதிவு ஒன்றிலேயே ஆசாத்சாலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

வீரகேசரியின் இன்றைய தலைப்புச் செய்தியானது விஷமத்தனமானது மட்டுமன்றி கோபமூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

மேலும், எக்னலிகொடவின் மனைவியை அவமானப்படுத்தி, அச்சுறுத்தியமைக்காகவே ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே, வீரகேசரி பத்திரிகையின் இன்றைய இழிவான தலைப்புச் செய்தி குறித்து, அதன் ஆசிரியர்பீடம் மன்னிப்புக் கோர வேண்டுமென நீங்கள் உத்தரவிட வேண்டும்.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில் இன்று சனிக்கிழமை பிரதான செய்தியினை எழுதியுள்ள வீரகேசரி பத்திரிகை; ‘ரமழான் பண்டிகைப் பரிசே, ஞானசார தேரரின் கைது’ எனத் தலைப்பிட்டுள்ளது.

தொடர்பான செய்திகள்:

01) ‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம்  

02) வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்