‘நாதாரி வீரகேசரிக்கு செருப்படி கொடுக்க வேண்டும்’: முஸ்லிம் விரோத தலைப்பு தொடர்பில் கண்டனம்

🕔 June 16, 2018

– அஹமட் –

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு சிறைச்தண்டனை விதிக்கப்பட்டமைக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் எதுவித தொடர்புகளும் இல்லாதபோதும், அந்த விவகாரத்துடன் முஸ்லிம் சமூகத்தினரை சிண்டு முடியும் வேலையினை வீரகேசரி நாழிதழ் மேற்கொண்டுள்ளதாக, முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘ரமழான் பண்டிகைப் பரிசே, ஞானசார தேரரின் கைது’ என தலைப்பிட்டு, இன்று சனிக்கிழமை வீரகேசரி நாழிதழ் பிரதான தலைப்புச் செய்தியினை எழுதியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை அச்சுறுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, கடூழிய சிறைத்தண்டனையினை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், குறித்த தீர்ப்பினை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி பொதுபலசேனா அமைப்பு கருத்துத் தெரிவித்தமையினை அடுத்து, அதனை ‘ரமழான் பண்டிகைப் பரிசே, ஞானசார தேரரின் கைது’ என்று தலைப்பாக்கி வீரகேசரி செய்தியாக்கி உள்ளது.

வீரகேசரி பத்திரிகையும், அந்த நிறுவனம் கொள்வனவு செய்து நடத்தி வருகின்ற மற்றொரு பத்திரிகையான தினக்குரலும், முஸ்லிம்களுக்கு எதிராக செய்திகளையும், கருத்துக்களையும் தொடர்ச்சியாக எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு எதிரான மனப் போக்குடன் வீரகேசரி செயற்படுகின்றமைக்கு, அதன் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் என்பவர் பிரதான காரணமானவர் என்கிற விமர்சனமும் உள்ளது.

வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய நிலையில் – பொதுத் தேர்தலொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ், சில காலங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் மேற்படி ஸ்ரீகஜன் என்பவர் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார்.

அதன் பின்னர், மீண்டும் வீரகேசரியில் இணைந்து கொண்ட ஸ்ரீகஜன், தற்போது அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

முஸ்லிம் விரோதப் போக்குடன் வீரகேசரி செயற்படுவதற்கும், மேற்படி கஜன் என்பவருக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில், வீரகேசரின் மேற்படி தலைப்புக் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்