‘ஒசுசல’ திறப்பதில் அட்டாளைச்சேனை புறக்கணிப்பு: பைசால் காசிமின் நன்றிகெட்டதனம் குறித்து மக்கள் விசனம்

🕔 May 6, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் ‘ஒசுசல’ மருந்து விற்பனை நிலையமொன்றினை திறக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோளினை, சுகாதார பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம், தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், அட்டாளைச்சேனை விடயத்தில் பிரதியமைச்சர் பைசால், நன்றி கெட்டதனமாக நடந்து வருவதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரதியமைச்சரின்சொந்த ஊரான நிந்தவூரில் ‘ஒசுசல’ அரச மருந்து விற்பனை நிலையமொன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று அக்கரைப்பற்று பிரதேசத்திலும் ‘ஒசுசல’  நிலையமொன்று திறக்கப்பட்டது.

மு.காங்கிரசைச் சேர்ந்த பிரதியமைச்சர் பைசால் காசிமுக்கு அட்டாளைச்சேனையில் அதிகமான வாக்குகள் வழங்கப்பட்டிருந்ததோடு, மிக நீண்டகாலமாக மு.காங்கிரசுக்கும் அட்டாளைச்சேனை பிரதேசம் வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் சுகாதார பிரதியமைச்சரான பைசால் காசிம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு இதுவரை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவில்லை என்று அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையிலேயே, ஒரு ‘ஒசுசல’  மருந்து விற்பனை நிலையத்தைக் கூட, அட்டாளைச்சேனையில் திறந்து வைக்காமல் அந்த ஊரை பைசால் காசிம் புறக்கணித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்