குளியாப்பிட்டிய பிரதேச சபையில், மயிலுக்கு பிரதி தவிசாளர் பதவி

🕔 April 2, 2018

குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் (தமாரை மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் (மயில் சின்னம்) இணைந்து கைப்பற்றிக்கொண்டது.

மேற்படி பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.சி.இர்பான் எதுவித போட்டியுமின்றி, ஏகமனதாக பிரதித் தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

தவிசாளர் பதவிக்காக போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மஹிந்த புஷ்பகுமார 16 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

குளியாப்பிட்டிய பிரதேச சபையில் 03 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், 02 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியும், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மனோஜ் என்பவரும் வாக்களிப்பில் பங்கேற்காது நடுநிலை வகித்தனர்.

பிரதித் தவிசாளர் தெரிவின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இர்பானுக்கு எதிராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சந்தன புஷ்பகுமாரவை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.சாஜஹான் பிரேரித்த போதும், சந்தன புஷ்பகுமார அதனை நிராகரித்து போட்டியிலிருந்து விலகினார்.

குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள, பொதுஜன பெரமுனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தலா 20 மற்றும் 02 ஆசனங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்