அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு

🕔 February 25, 2018

– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

அதிலும் இன்று, அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக, மாவட்டத்தில் நெல் அறுவடை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, அம்பாறை மாவட்டத்தில் வறட்சி மற்றும் பசளைத் தட்டுப்பாடு காரணமாக, நெல் அறுவடையில் 30 வீதமான வீழ்ச்சி ஏற்படுமென விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, தற்போது மழை காரணமாக நெல் அறுவடை பாதித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என, காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்