என்ன சரி இது நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்: சபீக் ரஜாப்தீன், வருத்தம் தெரிவிக்கும் அழகைப் பாருங்கள்

🕔 January 24, 2018

– அஹமட் –

கிழக்கு மாகாண மக்களை மிக மோசமான வார்த்தைகளால் அசிங்கமாகத் திட்டி பேஸ்புக்கில் பதிவுகளை இட்டிருந்த மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், தனது தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றமை போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், அந்த வீடியோவில் சபீக் ரஜாப்தீன் – உணர்வுபூர்வமாகவோ, பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தியோ மன்னிப்புக் கேட்கவில்லை.

“கிழக்கு மக்களுக்கு என்ன சரி, இது நடந்திருந்தால், மனமாற மன்னிப்புக் கேட்கிறேன்” என்று, அந்த வீடியோவில் சபீக் ரஜாப்தீன் கூறியுள்ளார்.

‘கிழக்கு மக்கள் சர்ந்தர்ப்பவாதிகள், தொழிலுக்காக அரசியல்வாதிகளைப் பிடித்துக் கொண்டு பிச்சை கேட்டு அலைபவர்கள், உங்களை நாங்கள் முட்டுக் காலில் மட்டியிட வைப்போம்’ என்று தெரிவித்த சபீக் ரஜாப்தீன்; அந்த வார்த்தைகள் கிழக்கு மக்களின் மனதை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதைக் கூட, கணக்கில் எடுக்காமல், “என்ன சரி நடந்திருந்தால்” என்று கூறியிருப்பது, அவரின் மேட்டுக்குடித்தனமான கர்வம் மிகுந்த குணத்தையே வெளிப்படுத்துவதாக, பலரும் விமர்சித்துள்ளனர்.

சபீக் ரஜாப்தீன் வெளியிட்ட கருத்தின் காரணமாக, அவர் சார்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கடமான நிலையினை இல்லாமல் செய்வதற்காகவே, சபீக் ரஜாப்தீன் வற்புறுத்தப்பட்டு, மன்னிப்பு கோர வைக்கப்பட்டுள்ளாரோ என்கிற சந்தேகமும், இந்த வீடியோவைப் பார்க்கும் போது ஏற்படுகின்றது.

தன்னால் மன நோவடைந்த மக்களிடம், ஒரு மன்னிப்பைக் கூட நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் கேட்பதற்கு விரும்பாத இந்த மனிதனையும், இவர் போன்ற மேட்டுக்குடியினரையும் மு.காங்கிரசில் வைத்துக் கொண்டு, கிழக்கு மாகாண மக்கள் எதைத்தான் சாதிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்