பிணை முறி தொடர்பான ஆணைக்குழு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

🕔 December 30, 2017

த்தியவங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சனிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி அறிக்கையினை ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்ரசிறி, ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதன்போது, ஆணைக்குழுவின் செயலாளர் எஸ். உடுகமசூரிய மற்றும் அதன் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதிபதி பீ.எஸ். ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வீ. கந்தசாமி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது வருகை தந்திருந்தார்.

Comments