மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு

🕔 December 30, 2017

– முன்ஸிப் அஹமட் –

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் கபட நாடகம் ஒன்றினை ஆடுவதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹாபிஸ் நசீருடன் பிரச்சினைப்பட்டுக் கொண்டு,  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் அலிசாஹிர் மௌலானா, தனது ஆரவாளர்களை முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசுச் சின்னத்தில் களமிறக்கியுள்ள நிலையில்,  தராசுச் சின்னத்தையே ஹாபிஸ் நசீர் கைப்பற்றிக் கொண்டு, அலிசாஹிர் மௌலானாவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் கூட, அவர்களை துரத்தியடிக்கும் நிலைவரமொன்று உருவாகும் எனவும் கூறினார்.

மேலும், தராசு சின்னத்தின் தலைவராக ஹாபிஸ் நசீரின் சகோதரரும், செயலாளராக ரஊப் ஹக்கீமுடைய மத்துனரும் பதவி வகிப்பதாகவும் பசீர் சுட்டிக்காட்டினார்.

ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய சமாதான முன்னணியின் வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை  ஏறாவூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும்போதே, மேற்கண்ட விடயங்களை பசீர் கூறினார்.

பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்த விடயங்களை வீடியோவில் காணலாம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்