ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு

🕔 December 1, 2017

ன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையினை, சட்ட ரீதியாக தாம் எதிர்கொள்வோம் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரல்லயில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒன்றிணைந்த எதிரணியின் நடவடிக்கையில் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால், எதிரணியினை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள, சிறிலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணையாது விட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவோம் என, அரசாங்கம் எச்சரிக்கிறது.

இவ்வாறு அச்சமூட்டி அடிபணிய வைக்க முடியாது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு பதவியிலிருந்து நீக்க முடியாது. அப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்