அமைச்சர் எஸ்.பி.யின் மனைவி சிக்கலில்; எரிபொருள் செலவாக பெரும் தொகை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு

🕔 December 1, 2017

மைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் எனும் வகையில், அவரின் மனைவி தமரா திஸாநாயக்க, எரிபொருள் செலவு எனும் பெயரில் அரச நிதியிலிருந்து 215,770 ரூபாவினை பெற்றுள்ளமை சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.

ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி இது தொடர்பில் விசாரணை செய்துள்ளார்.

சமுர்த்தி அமைப்பின் ‘ஹரித உயன’ திட்டத்திலிருந்து, தமரா திஸாநாயக்க இந்த பணத்தைப் பெற்றுள்ளார்.

பணத்தை வழங்குவதற்கு ஒப்புதலளிக்கும் அதிகாரியின் சார்பாக, குறித்த ரசீதில் தமரா திஸாநாயக்க கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்