உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல்

🕔 November 9, 2017

– மப்றூக் –

ள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை போல், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் இல்லாமல் செய்யப்பட்டு, அவற்றுக்குப் பகரமாக புதிதாக 06 பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அம்பகமுவ பிரதேச சபைக்கு பகரமாக உருவாக்கப்படும் மஸ்கெலிய, நோர்வுட் மற்றும் அம்பகமுவ ஆகிய புதிய பிரதேச சபைகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்றுதான் நடைமுறைக்கு வரும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வர்ததமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்.

அதேபோன்று, நுவரெலியா பிரதேச சபைக்குப் பகரமாக உருவாக்கப்படும் அக்கரப்பத்தன, கொட்டகல மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள், அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியன்றுதான் நடைமுறைக்கு வரும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், புதிய பிரதேச சபைகள் நடைமுறைக்கு வந்த பின்னர்தான் உள்ளுராட்சி தேர்தல்கள் நடைபெறும் என்றால், எதிர்வரும் மார்ச் அல்லது அதற்குப் பின்னர்தான் அந்தத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

புதிதாக உருவாக்கப்படும் சபைகளைத் தவிர்த்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான உத்தேசம் அரசாங்கத்துக்கு இருக்குமாயின், எதிர்வரும் ஜனவரியில்  உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

இது குறித்து உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்தான் தெளிவுபடுத்துதல் வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்