பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

🕔 November 10, 2017

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இரட்டைக் குடியுரிமையினை கீதா கொண்டுள்ளமையினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாது என, நீதிமன்றம் தீர்ப்பளித்தமையினை அடுத்து அவரின் பதவி பறிபோனது.

இதனால், ஏற்பட்ட வெற்றிடத்துக்கே பியசேன கமகே நியமிக்கப்பட்டார்.

கடந்தமுறை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பியசேன கமகே அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

அதற்கு முன்னர் 2000 – 2001 காலப் பகுதியிலும் இவர் பிரதியமைச்சர் பதவியினை வகித்தார்.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த பியசேன கமகே 1949 ஆம் ஆண்டு பிறந்தவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்