மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய

🕔 August 2, 2017

றட்சியான காலநிலையைக் காரணம் காட்டி, மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் மின்சக்தி மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

“தற்போதைய நிலையில் மின்சாரம் துண்டிக்கப்படுமா என்பது குறித்து சிலர் பேசி வருகின்றனர். அரசாங்கம் தற்போது மிகவும் சவாலான நிலைக்கு முகம் கொடுத்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

“கடந்த வருடத்தை விட மின்சாரத்துக்கான கேள்வி தற்போது நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளது. வறட்சியான காலநிலையின் போது, இந்த நிலை ஏற்பட்டுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களான நீர் நிலைகளின் மட்டம் நூற்றுக்கு 36 வீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மின்சக்தி அமைச்சர், சில நீர்நிலைகளின் மட்டம் நூற்றுக்கு 20 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலும் ஒரு மின் பிறப்பாக்கி இயந்திரம் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், எந்தவொரு மின் துண்டிப்பின்றியும், மின் கட்டண அதிகரிப்பின்றியும் மக்களுக்கு மின்சார சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்