ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம்

🕔 June 15, 2017

சாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த டோரா போரா மலைப் பகுதியை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஐ.எஸ். அமைப்பினர் இது குறித்து நேற்று புதன்கிழமை ஒலிப்பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில்; “ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த டோரா போரா மலைப்பகுதியில் ஐ.எஸ். கொடி பறக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அவர்களின் குடியிருப்புக்களிலேயே இருக்குமாறு தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும், மேற்படி ஒலிப்பதிவில் ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில்; “தாலிபன்களுக்கும், ஐ.எஸ். அமைப்பினருக்கும் இடையில், டோரா போரா மலையைக் கைபற்றுவது தொடர்பாக செவ்வாய்கிழமையன்று, கடும் சண்டை நடைபெற்றது. ஆனாலும், டோரா போரா மலையைக் கைபற்றியது யார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை” என்றனர்.

ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டமையினை அடுத்து, டோரா போரா மலைப் பகுதியைக் கைப்பற்றுவதில் ஐ.எஸ். அமைப்பினருக்கும் தாலிபன்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்