தலைப்புச் செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு, இன்று வியாழக்கிமை இடம்பெற்றது.

கொழும்பு விஜேராம பகுதியில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தநிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் மற்றும் உள்நாட்டு பிரமுகர்என பலரும் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் இந்த இப்தார் நிகழ்வில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ஏ.எஸ்.எம். அஸ்வர் – மேற்படி இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார்.