பொருளாதாரப் பிரச்சினைக்காக, பதக்கத்தை சுசந்திகா ஏலமிடுவது தீர்வாகாது: விளையாட்டுதுறை அமைச்சு

🕔 June 6, 2017

சுசந்திகா ஜயசிங்கவுக்கு பொருளாதார பிரச்சினைகள் இருக்கிறது என்பதற்காக, அவர் தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விடுவது தீர்வல்ல என்று , விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் பதில் செயலாளர் சோமரத்ன விதான பதிரண வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதவிக்குத் தேவையானவற்றை நிறைவேற்றி, அதற்கான கொடுப்பனவை பெற்று, விளையாட்டுக்கும் தாய்நாட்டுக்குமான சேவையை அமைதியாக அவர் செய்திருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம்

Comments