நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு

🕔 June 6, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் மல் ராஜபக்ஷவுடைய கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

30 மில்லியன் ரூபா பணச்சலவை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ஷக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் ,உயர் நீதிமன்றத்தில் இருந்து கிடைத்த அழைப்பாணைக்கு அமைய அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த நிலையிலேயே குறித்த மூவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்