கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 March 15, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில், சட்ட மா அதிபர் சார்பாக நேற்று செவ்வாய்கிழமை ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா இதனைக் கூறியுள்ளார்.

கீதா குமாரசிங்க, இரட்டைப் பிரஜா உரிமையினைக் கொண்டுள்ளமையினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாதென சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான குறித்த வழக்கு, நேற்று நீதிமன்றில் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 91 (01) இல் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இரட்டை பிரஜா உரிமை உள்ளது என்றும்  பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்