அமெரிக்காவில் பனிப்புயல்: இருவர் மரணம், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

🕔 March 15, 2017

மெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை பனிப்புயல் தாக்கி வருவதான் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர், 03 கோடிப் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்களும் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியான வொஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என்று அந்த நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி திங்கள்கிழமை நள்ளிரவு மணிக்கு 60 கி.மீ. வேகத் தில் பனிப்புயல் வீசத் தொடங்கியது. இதன் பாதிப்பு இன்று புதன்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று செவ்வாய்கிழமை 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில், பஸ் சேவைகளும் ஸ்தம்பித்துள்ளன.

இந்தப் பனிப்புயல் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருக்கிடையில் வொஷிங்டனில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு ரத்தாகியது.

பனிப்புயல் காரணமாக 03 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பனிப்பு யல் வீசத் தொடங்கிய சில மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்