கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை

🕔 September 9, 2016

beard-lady-022
ளவயதில் நீளமான தாடியை கொண்ட பெண் என்கிற வகையில், நேற்று வியாழக்கிழமை கின்னஸ் புத்தகத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் – ஹர்னாம் கவுர் என்பரே இவ்வாறு கின்னஸில் இடம் பிடித்துள்ளார்.

ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் ‘பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்டோம்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கு சுரக்கும் ஹோமோன்கள் பெண்களில் சுரப்பது என்று இந்த நோயினை சுருக்கமாக புரியும்படி கூற முடியும்.

இதனால் 11 வயதிலிருந்தே இந்தப் பெண்ணுக்கு, ஆண்களைப் போல முகம் உட்பட உடலில் முடி வளரத்தொடங்கியது. ஆரம்பத்தில் முடியை சவரம் செய்து வந்த இவர், 16 வயதில் அதை நிறுத்திவிட்டார். இதனால் இவருக்கு – தாடி, மீசை வளரத் தொடங்கியது.

சீக்கிய பெண்ணான ஹர்னாம் கவுர், தமது முறைப்படி தலைப்பாகை அணிந்து, தாடி வளர்த்து ஆண்களை போலவே மாறிவிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்துக்காக கின்னஸில் தனது பெயர் இடம்பெற்றமை குறித்து, தான் சிறுமையடைவதாக (பெருமையல்ல) ஹர்னாம் கவுர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.beard-lady-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்