INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி; நான்கு நாட்கள், சம்மாந்துறையில்

🕔 September 9, 2016
incom-01
– றிசாத் ஏ காதர் –

ம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பீ வணிகசிங்க தலைமயில், மாவட்டக் கச்சேரியில் இடம்பெற்றது.

எதிர்வரும் 23,24,25 மற்றும் 26ஆம் திகதிகளில் இவ் வர்த்தகக் கண்காட்சி, சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின், கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இந்தக கண்காட்சியை நடத்தவுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.ஏ. அலாம் கலந்து கொண்டு இவ் வர்த்தகக் கண்காட்சி தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

இதேவேளை – கண்காட்சி தொடர்பாகவும், இதனை நடத்துவதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் – கைத்தொழில் அபிவிருத்திச் சபை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சதொச நிறுவனம், தேசிய விவசாய அபிவிருத்தி நிறுவனம் மற்றும் புடவைக் கைத்தொழில் நிறுவனம் போன்றவற்றின் உயர் அதிகாரிகள் இங்கு தெளிவுபடுத்தினார்கள்.

இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ. அமீர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தெளபீக், கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிராந்திய அபிவிருத்திப் பணிப்பாளர் கே.எம்.எஸ்.ஜீ. பண்டார மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.incom-03 incom-02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்