தலைப்புச் செய்திகள்

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Basil Rajapakse - 012முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக, இன்று திங்கட்கிழமை காலை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து. அவர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, அவரை எதிர்வரும் 01 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.