கருங்கொடி மகுடம்; முஅத்தின்கள், பள்ளிவாசல் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

🕔 July 18, 2016
Mosque - 011க்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த முஅத்தின்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு, நாளை செவ்வாய்கிழமை மாலை 04.00 மணிக்கு அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறவுள்ளது.

அக்கரைப்பற்றின் ஆளுமைகளை பாராட்டி கௌரவிக்கும் ‘கருங்கொடி மகுடம்’ எனும் தலைப்பிலான தொடர் நிகழ்வில் இரண்டாம் அங்கமாக மேற்படி கௌரவிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

‘கருங்கொடி வெல்பெயா போரம்’ ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அக்கரைப்பற்றில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தின்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இலைமறை காயாக சமுகத்திற்துக்கு உழைத்துவரும் பலரை பாராட்டி கௌரவிப்பதுடன், ஏனையவர்களையும் சமூக சேவையின்பால் முன்கொண்டு வருவதே இந்நிகழ்வு நடத்தப்படுவதற்கான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

‘கருங்கொடி மகுடம்’ முதலாம் கட்ட நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேசத்தின் கல்வியலாளர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

இதன் மூன்றாம் கட்ட நிகழ்வாக, அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமையாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்