பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு

🕔 May 22, 2016

Raining - 0986நாட்டில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் மக்கள் ஒருபுறம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நிலையைில் – மேல், வடமேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யக் கூடும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலும் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளி மண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதி, மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடாக, ஹம்பாந்தோட்டை வரையான கடற் பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்