அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர்

🕔 May 22, 2016

Car Accident - 0987
– சப்னி –

பாரியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளான போதும், அதனுள் பயணித்தவர்கள் எதுவித ஆபத்துக்களுமின்றி தப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.

கல்முனையிலிருந்து – அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த மேற்படி கார், அட்டாளைச்சேனை பிரதான வீதியிலுள்ள நிவ் ரமீஸா ஹொட்டலுக்கு முன்னால் இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானது.

வீதி அருகிலிருந்த தொலைபேசிக் கம்பத்தில் மோதி,  அதனை உடைத்துக் கொண்டு சென்ற கார் – பின்னர், மரமொன்றுடன்  மோதியது.

ஆயினும், காரில் இருந்த காற்றுப்பையின் (Airbag) உதவியுடன், சாரதியும் காரின் முன்னால் பயணித்தவரும் ஆபத்தின்றி தப்பியுள்ளனர்.

காரில் பயணித்தவர்கள் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களாவர்.

இருந்த போதும், இந்த விபத்தில் கார்  முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.Car Accident - 0986Car Accident - 0988
Car Accident - 0984

Comments

புதிது பேஸ்புக் பக்கம்