Back to homepage

பிரதான செய்திகள்

மாகாணசபை தொகுதி நிர்ணயமும், முஸ்லிம்களும்

மாகாணசபை தொகுதி நிர்ணயமும், முஸ்லிம்களும் 0

🕔18.Mar 2018

– வை எல் எஸ் ஹமீட் – மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை நாடாளுமன்றுக்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21 தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த ஆசனங்கள் 437 ஆகும். அவற்றில் முஸ்லிம்களுக்கு 42 ஆசனங்களாவது கிடைக்க வேண்டும். கிழக்கில் பெறக்கூடிய அதிகூடிய

மேலும்...
அவசரகாலச் சட்டம் நீக்கம்; வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்து

அவசரகாலச் சட்டம் நீக்கம்; வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்து 0

🕔18.Mar 2018

நாட்டில் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத

மேலும்...
இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔18.Mar 2018

இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை மாத்திரம்கொடுத்து திருப்திப்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதவிர, முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்டார் அறக்கட்டளையின் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியினால் ஏறாவூர் பைத்துல் ஸகாத்

மேலும்...
அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0

🕔18.Mar 2018

கண்டி மாவட்டத்தில் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலின் பிரதான சூர்திரதாரிகளில் ஒருவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவையும் மேலும் 09 பேரையும்  எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய மற்றும் கலகெதர நீதவான் நீதிமன்றங்கள் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் இனவாதத் தாக்குதலை

மேலும்...
அவன் ஒரு குடிகாரன்; சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம்

அவன் ஒரு குடிகாரன்; சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம் 0

🕔16.Mar 2018

“ஞானசார தேரர் ஒரு குடிகாரன், ஞானசாரவை நான் பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் சில கபட நரிகள், இந்த குடிகாரனை கண்டதும் மண்டியிட்டு வணங்குகின்றனர்” என படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜருமான சட்டத்தரணி

மேலும்...
அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசல் அறை உடைக்கப்பட்டு, சி.சி.ரி.வி. ஒளிப்பதிவு சாதனம்  திருட்டு

அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசல் அறை உடைக்கப்பட்டு, சி.சி.ரி.வி. ஒளிப்பதிவு சாதனம் திருட்டு 0

🕔16.Mar 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று புதுப் பள்ளிவாசலின் காரியாலய அறை உடைக்கப்பட்டு, அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் காட்சிகள் பதிவு செய்யப்படும் சாதனம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், புதுப் பள்ளிவாசலின் செயலாளர் ஆதம்லெப்பை அப்துல் லத்தீப் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு பள்ளிவாசலின் அலுவலகத்தில் குறித்த ஒளிப்பதிவு சாதனம்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல் தொடர்பில், ஐ.நா. சபையின் கொழும்பு காரியாலயத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு

முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல் தொடர்பில், ஐ.நா. சபையின் கொழும்பு காரியாலயத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு 0

🕔16.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனவாத தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையொன்றினை, முஸ்லிம்  உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர். கொழும்பு – பம்பலப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜூம்ஆ  தொழுகையினையடுத்து, அங்கு ஒன்று திரண்ட முஸ்லிம்கள், ஐக்கிய நாடுகள்

மேலும்...
அனுமதி வழங்கப்பட்ட 1300 பிஸ்டல்கள், பொதுமக்களிடம் உள்ளன: பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிப்பு

அனுமதி வழங்கப்பட்ட 1300 பிஸ்டல்கள், பொதுமக்களிடம் உள்ளன: பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிப்பு 0

🕔16.Mar 2018

அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட 1300 பிஸ்டல் கைத்துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் என்.டி. பண்டிதரத்ன தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக 19,000 துப்பாக்கிகள் விவசாய நோக்கத்துக்காக வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த பொதுமன்னிப்பு காலப்பகுதியில், 1000க்கும் அதிகமான துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன எனவும் அவர் விபரித்தார். இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான

மேலும்...
உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔16.Mar 2018

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், சீராக்கல் பணிகள் நிமித்தம் தாமதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், தற்போது 10 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களில்

மேலும்...
அக்கரைப்பற்றில் டயர் எரிக்கப்பட்டமையை அடுத்து, கொழும்பு கிளம்பினார் அதாஉல்லா

அக்கரைப்பற்றில் டயர் எரிக்கப்பட்டமையை அடுத்து, கொழும்பு கிளம்பினார் அதாஉல்லா 0

🕔15.Mar 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு எதிராக, அவரின் கட்சிக்காரர்கள் நேற்று புதன்கிழமை டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமையினை அடுத்து, அக்கரைப்பற்றில் தங்கிருந்த அதாஉல்லா, நேற்று இரவு  திடீரென கொழும்பு சென்றுள்ளார். அக்கரைப்பற்றில் நேற்றைய தினம் அதாஉல்லாவுக்கு எதிராக, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் டயர்களை வீதிகளில் எரித்ததோடு, அதாஉல்லாவின்

மேலும்...
மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரை; ஒரு கற்பனைக் கதை: இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவிப்பு

மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரை; ஒரு கற்பனைக் கதை: இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவிப்பு 0

🕔15.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் – மாத்திரிகைகளை  உணவுடன் கலப்பதன் மூலம்  மலட்டுத் தன்மையை அல்லது கருவளத்தைத் தடுக்க முடியாது என்று இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவா் சங்கத்தின் பொரளையிலுள்ள தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய,  அந்தச் சங்கத்தின் மருத்துவத்துறை பேராசிரியா்கள், வைத்திய கலாநிதிகள் உள்ளிட்ட

மேலும்...
இலத்திரனியல் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்; சட்திலுள்ள குறைபாடுகள் காரணமாகும்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

இலத்திரனியல் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்; சட்திலுள்ள குறைபாடுகள் காரணமாகும்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔15.Mar 2018

  ஒன்லைன் முறைமையை பயன்படுத்தும் இலத்திரனியல் வர்த்தக நடவடிக்கையில், இலங்கை நுகர்வோர்கள் இன்னும் அச்சத்துடனேயே இருப்பதாகவும், சட்டங்களிலும் ஒழுங்கு விதிகளிலும் உள்ள குறைபாடுகளும் போதிய பாதுகாப்பு இன்மையுமே இதற்குக் காரணமாக அமைவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக நுகர்வோர் தினத்தையொட்டி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில், ‘டிஜிட்டல் முறையிலான சாதாரண சந்தைப்படுத்தல்

மேலும்...
ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் 0

🕔15.Mar 2018

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு மொழி கற்கை நிலையம்; அரபு மொழியை அடிப்படையிலிருந்து கற்க விரும்புவோருக்கான மூன்று மாத கால ஆரம்ப கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. நவீன கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி அரபு மொழியில் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு ஆற்றல்களையும் விருத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாடநெறி பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

மேலும்...
ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ஞானசாரவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Mar 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையொன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால், அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. திட்டமிட்ட குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவினர், மேற்படி வழக்கினை ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தனர். இதேவேளை, ஜப்பானில் ஜனாதிபதி கலந்து

மேலும்...
பேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தல்

பேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔15.Mar 2018

பேஸ்புக் மீதான தடையினை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு, அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைகளை ஊக்குவிக்கும் படியான பதிவுகளை பேஸ்புக்கில் இடுவதைக் கட்டுப்படுத்துவதாக, அந்த நிறுவன அதிகாரிகள் வழங்கிய உறுதியினை அடுத்து, பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்