Back to homepage

Tag "ஆப்கானிஸ்தான்"

ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு 0

🕔1.Aug 2018

ஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும்,  இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனீர் கயாஷி தெரிவித்தார்.“உலர் பழங்கள், நெய்யப்பட்ட தரை கம்பளங்கள், பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த கற்கள் உள்ளடங்கிய ஆப்கான் உற்பத்திப்

மேலும்...
பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம் 0

🕔30.Apr 2018

பிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக

மேலும்...
ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி 0

🕔30.Apr 2018

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார். இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...
ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது 0

🕔28.Jan 2018

 ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர். வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, ஆகக் குறைந்தது 158 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரச பணியாளர்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வீதியொன்றில் அமைந்துள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில், அம்பியுலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று,

மேலும்...
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி 0

🕔28.Dec 2017

ஆப்பானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் 38

மேலும்...
ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம்

ஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம் 0

🕔15.Jun 2017

ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த டோரா போரா மலைப் பகுதியை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் இது குறித்து நேற்று புதன்கிழமை ஒலிப்பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில்; “ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த டோரா போரா மலைப்பகுதியில் ஐ.எஸ். கொடி பறக்கிறது” என கூறப்பட்டுள்ளது. இதேவேளை, ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அவர்களின் குடியிருப்புக்களிலேயே இருக்குமாறு தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்