பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 May 11, 2016

Pillayan - 0987பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி பிள்ளையான் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பிள்ளையான் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதிபதி எம்.ஐ.எம்.முகைதீன் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்