என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம்

🕔 May 10, 2016

Gottabaya - 0987ரத் பொன்சேகாவிற்கு ராணுவ தளபதி பதவி வழங்கிய தன்னை – தானே அடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

பாரிய ஊழல், மோசடி தொடர்பில விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை பிரசன்னமான போது, ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவற்றினைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கோட்டாவின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு கோட்டாபய பதிலளிக்கையில்;

“மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. உயிர் அச்சுறுத்தல் காரணமாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, லக்ஷ்மன் கதிர்காமரின் மனைவி ஆகியோருக்கும் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டமை அநீதியானது” என்றார்.

இதேவேளை, பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபகஷ கடமையாற்றிய போது, அவரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் அவராலேயே திட்டமிடப்பட்டது என, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்து குறித்தும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பப்பினர்.

இதற்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ஷ: “இவ்வாறான கருத்து வெளியிடும் நபருக்கு ராணுவ தளபதி பதவி வழங்கிய தம்மை முதலில் அடிக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்