மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பை நீக்கும் தீர்மானம்; இடைநிறுத்தினார் ஜனாதிபதி

🕔 April 9, 2016

Maithiri+Mahinada - 0001முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பினை நீக்கும்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள ராணுவப்பாதுகாப்பினை அகற்றி அதற்கு பதிலாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பாதுகாப்புஅமைச்சு தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி தமது பாதுகாப்புக்கென நியமிக்கப்படடுள்ள 103 ராணுவஉத்தியோகத்தர்களும், கடமையில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்படுவர் என முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை நீக்கி, அதற்கு பதிலாக பொலிஸார் பாதுகாப்பு கடமையில்ஈடுபடுத்தப்படுவர் எனவும், சிவில் பாதுகாப்புப் பணிகளில் படையினரை ஈடுபடுத்துவது சட்டத்துக்கு முரணா விடயம் எனவும், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்