மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது

🕔 April 8, 2016

Karunasena hettiarachchi - 099ட்டத்துக்கு முரணான வகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 103 ராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவ்வளவு காலமும் நடந்த இந்தத் தவறைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடையெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 103பேரும், ராணுவத்தைச் சேர்ந்த 103பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லாத போது, ராணுவ பாதுகாப்பு வழங்கவேண்டிய சட்ட நடைமுறையொன்று இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது, இது தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டது. ராணுவத்தினருக்கு பதிலாக, அவர்களுக்கு ஈடான பயிற்சிபெற்ற விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவ்வளவு காலமும் செய்த தவறை, இவ்வாறாக நிவர்த்தி செய்வோம்” என்றார்.

ஊடகவியலாளர்: அப்படியானால், இவ்வளவு காலமும் சட்டத்துக்கு முரணாகவா ராணுவத்தை வழங்கியிருந்தீர்கள்?

பாதுகாப்பு செயலாளர்: உண்மையைச் சொன்னால், அது தான் உண்மை. இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ ராணுவ பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், முன்னாள் ஜனாதிபதிக்கு 103 ராணுவத்தனரையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 50 இராணுவத்தினரையும் வழங்கியிருந்தோம்.

அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகப் பரவியுள்ள வதந்தி பொய்யானதாகும். சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பியுள்ளோம். இப்போது அவரின் பாதுகாப்புக்கென ராணுவம் மற்றும் பொலிஸார் என 256பேர் கடமையில் உள்ளனர். பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை படிப்படியாகக் குறைத்து, அவர்களுக்குப் பதிலாக விசேட அதிரடிப்படையினரையும் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நியமிப்போம். தவிர, பாதுகாப்பை ஒருபோதும் குறைக்க மாட்டோம். தேவையான பாதுகாப்பை வழங்குவோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்