கடலில் சிக்கிய ஹெரோயின் கப்பல்; வெளிநாட்டவர்களும் கைது

🕔 April 2, 2016

Heroin - 0909
லங்கையின் தெற்குக் கடற்பகுதியில்பயணித்த கப்பலொன்றிலிருந்து 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றை நேற்று வெள்ளிக்கிழமை சோதனைக்குட்படுத்திய போதே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

இதன்போது, கப்பலில் இருந்த 10 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து கடற்படையினர் முன்னெடுத்திருந்திருந்தனர்.Heroin - 0907Heroin - 0908Heroin - 09065

Comments

புதிது பேஸ்புக் பக்கம்