மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார்

🕔 March 31, 2016

Odor - 012னது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதத்துக்கு ஒருமுறை கூட குளிப்பது இல்லை என்றும், சுத்தமாக இருப்பதில்லை எனவும் தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம்  பாக்பட் நகரை சேர்ந்த பெண் ஒருவரே, அங்குள்ள மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் தனது முறைப்பாட்டினை வழங்கியுள்ளார். இந்த நிலையில், குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்;

“குறித்த பெண்ணின் கணவர் மாதத்துக்கு ஒரு முறை கூட குளிப்பது இல்லை என்று அந்தப் பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். சுத்தமாக இருங்கள் என்று கூறிய மனைவிக்கு அவரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், அவரது  குடும்பத்தினரிடம் சுத்தம், சுகாதாரமாக இருக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதை புறக்கணித்து,  வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் அந்த பெண்ணை அவமானப்படுத்தியும் உள்ளனர்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த ஆண்டு தீபாவளிக்கு குளித்துள்ளனர். பின்னர் 05 மாதம் கழித்து தற்போது ஹோலி பண்டிகைக்கு குளித்துள்ளனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்