கொலையில் முடிந்த பகிடி

🕔 March 29, 2016

Knife - 034– க. கிஷாந்தன் –

கிடியான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முறுகல் நிலை உருவாகி, கத்திக் குத்து இடம்பெற்றதில், நபரொருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் பி.கே. அமரசேகர என்ற 45 வயது நிரம்பிய குடும்பஸ்தவர் பலியானார்.

இது குறித்து, கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையடுத்து, கொஸ்லந்தையைச் சேர்ந்த ஏ. சுப்ரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் அந் நபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் மீட்கப்பட்டது.

கொஸ்லந்தை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கமைய, கத்தியினால் குத்தியமையினாலேயே, மரணம் சம்பவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இது கொலையெனவும் ஊர்ஜிதமாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தினையடுத்து, கொஸ்லந்தை பகுதியில் பெரும் பதட்ட நிலையும், இனமுறுகலும் ஏற்பட்டுள்ளன.  பொலிஸ் பாதுகாப்பு நகரில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்