தலைப்புச் செய்திகள்

திறமையான மாணவர்களை பாராட்டும், மக்கள் காங்கிரஸின் ‘Award of Excellence – 2026’ நிகழ்வுகள், கற்பிட்டி மற்றும் கொழும்பில் நடைபெற ஏற்பாடு

படம்: AI மூலம் உருவாக்கியது

க.பொ.த சாதரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளில் அனைத்துப் பாடங்களிலும் A தர சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி – கௌரவிக்கும் பொருட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு – நாடு பூராகவும் நடத்திவரும் Award of excellence -2026 நிகழ்ச்சிகள், நாளை (01) கற்பிட்டியிலும் நாளை மறுநாள் (02) கொழும்பிலும் நடைபெறவுள்ளன.

இரண்டு நிகழ்வுகளிலும் பிரதம அதிதியாக – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் கலந்து கொள்ளவுள்ளார்.

கற்பிட்டி – சயாப் மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்.ரி.எம். தாஹிர் தலைமை தாங்குகின்றார்.

கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை மறுதினம் நடைபெறும் நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமை தாங்கவுள்ளார்.

திறமையுள்ள மாணவர்களை ஊக்கப்படும் Award of excellence நிகழ்ச்சித் திட்டத்தை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு நீண்ட காலமாக நடத்தி வருகிறது.

ஏற்கனவே, அக்கரைப்பற்று கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயம், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அனுராதபுரம் மாவட்டம் மற்றும் குருநாகல் மாவட்டம் ஆகியவற்றிலுள்ள மாணவர்களை பாராட்டும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.