பேரீச்சம் பேரழகு!

🕔 June 8, 2015

Dates - kky - 01– பாறுக் ஷிஹான் –

காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சம் மரங்கள் –   காய்த்துக் குலுங்க ஆரம்பித்துள்ளமையானது காண்போரைக் கவரும் விதமாக உள்ளன.

காத்தான்குடி நகரத்தினை அழகுபடுத்தும் நோக்கில், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் முயற்சியினால்,  இந்தப் பேரீச்சம் மரங்கள் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு நடப்பட்டன.

இந்த மரங்கள், கடந்த சில வருடங்களாக ஆச்சரியம் தரும் வகையில் காய்த்து வருகின்றன.

காத்தான்குடியினூடாகச் செல்லும் – வெளிப் பிரதேசத்தவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் இந்தப் பேரீச்சம் மரங்களின் அழகு – கவரும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Dates - kky - 02Dates - kky - 03Dates - kky - 04

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்