அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வருடாந்த சந்திப்பு

🕔 June 8, 2015

Postal dep - 01– எம்.வை. அமீர் –

ஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின்  08 ஆவது வருடாந்த சந்திப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை –  மாளிகைக்காடு பிஸ்மில்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சங்கத்தின் பொதுச்செயலாளர் யூ.எல்.எம். பைஸரின்  நெறியாள்கையில் நடைபெற்ற இச் சந்திப்பில் – கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வீ. விவேகானந்தலிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், பிராந்திய நிருவாக அலுவலர் எம். தம்பிஐயா, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.எம். ரூபசுந்தர பண்டா, தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் வீ.ரீ. சகாதேவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் நடப்பு வருடத்துக்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், சங்கத்தின்  ‘UPDO NEWS’ எனும் செய்தி மடலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அலுவலகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன. Postal dep - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்