
ராஜகிரியவில் – மெத வெலிக்கடை வீதியில் சுமார் 120 வெளிநாட்டுப் பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் எனம் சந்தேகத்தின் பேரில் – இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
அவர்களிடமிருந்து பல கணினிகள் மற்றும் கைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளது.


