
இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் ரூ. 2000 அதிகரித்துள்ளது. உள்ளூர் சந்தைத் தரவுகளின்படி, உலகளாவிய சந்தைப் போக்குகளுக்கு இணங்க இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இன்றைய (20) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உலக விலை $4,829 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, கொழும்பு Sea street தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 370,000 ஆக உயர்ந்தது.

நேற்று (19) ரூ. 400,000 ஆக இருந்த ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 402,000 ஆக உயர்ந்துள்ளது.


