தலைப்புச் செய்திகள்

மூத்த பாடகி ஆஷா போஷ்லே காலமானார்

இந்திய மூத்த பாடகி ஆஷா போஸ்லே இன்று மும்பையில் 92ஆவது வயதில் காலமானர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசைகளில் மிகவும் பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.

அவற்றில்,
– நீ பார்த்த பார்வைக்கு நன்றி (ஹேராம்)
– ஓ.. பட்டஃபிளய் பட்டஃபிளய்.. (மீரா)
– கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் (சந்திரமுகி)
– செப்டம்பர் மாதம்… செப்டம்பர் மாதம் (அலைபாயுதே)
– செண்பகமே.. செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்) போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

பாடகி லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar) மற்றும் ஆஷா போஸ்லே (Asha Bhosle) இருவரும் சொந்தச் சகோதரிகளாவர். ஆஷா போஷ்லே இளையவர்

இவரின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை நடைபெறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.