
அரச நிறுவனங்களுக்கு புதன்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த விசேட விடுமுறை, ஏப்ரல் 08ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் அறிவித்துள்ளார்.
தற்போது நிலவும் தேசிய தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த புதன்கிழமை விடுமுறை முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு புதன்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விசேட விடுமுறை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி இயல்பாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


