தலைப்புச் செய்திகள்

ஈரான் கப்பலில் காப்பற்றப்பட்டவர்கள் குறித்து, இலங்கை எடுக்கும் தீர்மானத்தை மதிக்கிறோம்: அமெரிக்கா

ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Bushehr’ மற்றும் அதன் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட சூழ்நிலையை கையாள்வதில் – இலங்கையின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது என்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கப்பல், அதன் பணியாளர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவு, நாட்டின் உள்நாட்டு சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு இணங்க இலங்கையிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் சர்வதேச ஒப்பந்தக் கடமைகளின் கீழ், ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வின் 32 மாலுமிகளை இலங்கை கவனித்துக்கொள்வதாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் – இந்தியாவில் நடந்த ஒரு மாநாட்டில் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.

இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு சற்று தொலைவில் புதன்கிழமை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

உயிர் பிழைத்தவர்களை மீட்க இலங்கை தனது கடற்படையை அனுப்பி 84 உடல்களை மீட்டது.

ஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா கொழும்புக்கு அழுத்தம் கொடுத்ததா என்று கேட்டதற்கு, விஜித ஹேரத் நேரடியாக பதிலளிக்கவில்லை.

‘‘சர்வதேச சட்டங்களின்படி நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்,’’ என்று அவர் தெரிவித்தார்.