தலைப்புச் செய்திகள்

LGBTIQ -ஐ ஊக்குவிப்பதில்லை என, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானம்

இலங்கையில் LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிப்பதில்லை என்று, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) கொள்கையளவில் முடிவு எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எடுத்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதற்கிடையில், இலங்கையில் LGBTIQ சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு அனுமதியளித்து, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் வெளியிட்ட கடிதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற முடிவு செய்தார். மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க விதாரண ஆஜரானார்.