தலைப்புச் செய்திகள்

ஈரானின் உச்ச தலைவராக யார் தெரிவு செய்யப்பட்டாலும் கொல்வோம்: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

ஈரானின் அடுத்த உச்ச தலைவராக யார் தெரிவு செய்யப்பட்டாலும், அவர் கொல்லப்படுவார் என்று – இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று (04) புதன்கிழமை, அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்ப அமைச்சர் இஸ்ரெல் கட்ஸ் அவரின்ட X பக்கத்தில் இந்த அறிக்கை வெளியிட்டார்.

“இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை அடக்கவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும் ஒழிக்கப்பட வேண்டிய இலக்காக இருப்பார்கள்’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஈரானின் நிபுணர்கள் சபையுடன் தொடர்புடைய ஒரு கட்டிடத்தை – நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் குறிவைத்தது.

போரைத் தொடங்கிய சனிக்கிழமை நடந்த தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டார்.