
சுகாதார தரவு அறிக்கையிடலில் இருந்து பிப்ரவரி 18 முதல் விலகுவதற்கான முடிவை அரச வைத்திய அதிகாிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
தங்கள் கோரிக்கைக்க அரசாங்கம் போதுமான பதிலை வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி, அதன் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலையீடு மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் சமூக சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிப்பதைத் தவிர்க்கவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சமூக சுகாதார சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுடன் தொடர்புடைய மேற்பார்வை கடமைகளை நிறுத்தி வைப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


